அரசியல் அனுபவமற்ற நிலையில், இராணுவ நிர்வாகம் ஒன்றை நடாத்துவது போன்று அரசை நிர்வகிக்கச் சென்றமையே கோட்டாபயவின் வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம் என தெரிவிக்கிறார் டலஸ் அழகப்பெரும.
அரசியல் ரீதியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான போதிய நுணுக்கமற்ற நிலையில், தன்னைச் சுற்றியிருந்த சிறு கூட்டத்தோடு இணைந்து நாட்டை நிர்வகிக்கச் சென்ற கோட்டா, அரசியல் சூழ்நிலைகளுக்கு எதிர் வினையாற்றத் தெரியாதவர் என மேலும் விளக்கமளித்துள்ளார்.
நாடே அவரை பதவி விலகச் சொன்ன நிலையில், ஏனைய அரசியல் கட்சிகளை கூட்டணியமைக்க கடிதம் அனுப்பிக் கொண்டிருந்த கோட்டாபய தொடர்ந்தும் அரசியலைக் கற்றுக் கொள்ளவில்லையென சிங்கள வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் டலஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment