ராஜபக்ச குடும்பத்தின் ஒட்டு மொத்த உருவமாக வந்துள்ள 'ரணில் ராஜபக்சவின்' முடிவு, வரலாறு காணாத வகையில் மோசமாக இருக்கும் என்கிறார் ஹிருனிகா பிரேமசந்திர.
மக்கள் போராட்டம் எனும் போர்வையில் காடைத்தனத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதில் தவறில்லையாயினும், தமது உரிமைகளுக்காக கொதித்தெழுந்த மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முனையும் ரணில் ராஜபக்ச, வரலாறு காணாத வகையிலான மோசமான முடிவை சந்திக்கப் போகிறார் என ஹிருனிகா விளக்கமளித்துள்ளார்.
தனது தந்தையின் கொலைக்கு நீதி தேடி, மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து ரணிலுடன் கை கோர்த்திருந்த ஹிருனிகா, தற்போது ரணிலை எதிர்த்துப் போராடி வருகின்றமையும், நாட்டின் இக்கட்டான சூழ்நிலை தணிந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment