ஜனாதிபதி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகுந்திருந்த வேளையில் படுக்கை விரிப்பொன்றை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான நபருக்கு செப்டம்பர் 9ம் திகதி வரை கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் விளக்கமறியல் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் நீச்சல் தடாகத்தில் குதித்த நபர்களையும் தேடி பொலிசார் வலை விரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment