பதவிகள் கிடைத்தால் ஓடி விடுகிறார்கள்: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Sunday 7 August 2022

பதவிகள் கிடைத்தால் ஓடி விடுகிறார்கள்: மைத்ரி

 



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் அமைச்சுப் பதவிகளை யார் கொடுத்தாலும் கட்சியை விட்டு ஓடி விடுகிறார்கள் என விசனம் வெளியிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


காலில் விழாத குறையாக கெஞ்சியும் ரணில் அரசில் பதவி கிடைத்த போது சிலர் ஓடி விட்டார்கள் எனவும் கோட்டா அரசிலும் இவ்வாறே நடந்தது எனவும் மைத்ரி ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.


இந்நிலையில், சர்வ கட்சி அரசில் பங்கேற்பதற்கு மைத்ரி தரப்பு தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment