இலங்கையில் ஜனாதிபதியாவதற்காக தனது அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டிருந்த கோட்டாபய ராஜபக்ச, மீண்டும் அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கான கிறீன் கார்ட் விசாவுக்கு விண்ணப்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்சமயம் தாய்லாந்தில் தங்கியிருக்கும் கோட்டாபய, மீண்டும் இம்மாதம் நாடு திரும்பக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதோடு அமெரிக்க விசா முடிவுக்காக இலங்கையிலேயே காத்திருக்கப் போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்சமயம் இலங்கை ராஜதந்திர கடவுச்சீட்டிலேய முன் கூட்டிய விசா பெறுவதற்கான தேவையில்லாத நாடுகளுக்கு கோட்டாபய பயணித்துக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment