வெளிநாடுகளில் பணியாற்றுபவர்கள் நாட்டுக்கு சட்டரீதியாக பணம் அனுப்புவது வெகுவாக குறைந்துள்ளதாகவும் உண்டியல் போன்ற சட்டவிரோத வழிமுறைகைளைக் கையாள்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளது பொலிஸ்.
நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்தில் வீழ்வதற்கு இதுவும் ஒரு காரணம் எனவும் இவ்வாறான செயற்பாடுகள் சட்டவிரோத பணப்பரிமாற்றத்துக்கு எதிரான விதிகளுக்கு அமைவாக கையாளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்னிய செலாவணி வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அரசாங்கத்தைக் கொண்டு செல்வது கடினமாகியுள்ளதாக பந்துல குணவர்தன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment