அதிகரிக்கும் செலவு; நாடு திரும்பும் பேச்சுவார்த்தை தீவிரம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 August 2022

அதிகரிக்கும் செலவு; நாடு திரும்பும் பேச்சுவார்த்தை தீவிரம்

 



தாய்லாந்தில் தங்கியிருக்கும் செலவுகள் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் கூடிய விரைவில் நாடு திரும்ப வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.


24 மணி நேர பாதுகாப்புடன் அந்நாட்டில் தங்கியிருப்பதற்கு வெகுவாக செலவு செய்ய வேண்டியுள்ள நிலையில் நாடு திரும்புவதற்கான பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளது பெரமுன தரப்பு.


கோட்டாபய ராஜபக்ச மற்றும் குடும்பத்தாரின் பாதுகாப்புக்கான உத்தரவாதமும் ஏற்பாடும் உறுதி செய்யப்பட்டதும் அவர் விரைவில் நாடு திரம்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் முன்னதாக இன்றைய தினம் மீள வருவதற்கு முன்னெடுத்த திட்டம் கைவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment