வலகம்பா அரசன் போன்று இழந்த ஆட்சியதிகாரத்தை கோட்டாபய ராஜபக்ச மீண்டும் கைப்பற்றுவார் என ஆரூடம் வெளியிட்டுள்ளார் ஜோதிடர் கமல் ரோஹன.
ஆட்சிபீடம் ஏறிய ஐந்து மாதங்களில் பதவி கவிழ்க்கப்பட்ட வலகம்பாகு மன்னன், மீண்டும் 14 வருடங்களின் பின்னர் ஆட்சிபீடத்தைக் கைப்பற்றியதாக சிங்கள வரலாறு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்னும் சில நாட்களில் நாடு திரும்பக் கூடும் என எதிர்பார்க்கப்படும் கோட்டாபயவும் மீண்டும் ஜனாதிபதியாவார் என ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, கோட்டா மீண்டும் அரசியலில் ஈடுபடப் போவதில்லையென சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment