பேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பார்த்துக் கொண்டு ஆட்சி நடாத்த முடியாது என தான் எத்தனை எச்சரித்தும் கோட்டாபய ராஜபக்ச அதனைப் பொருட்படுத்தாதன் விளைவே அவரது ஆட்சி கவிழ்ந்ததாக தெரிவிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க.
குறித்த இணையப் பரப்பில் பரப்பப்படும் கதைகளை நம்பி நாட்டின் நிர்வாகம் தொடர்பிலான தீர்மானங்களை எடுக்க வேண்டாம் என தாம் பல தடவைகள் எச்சரித்ததாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
எனினும், கோட்டாபய தொடர்ந்தும் சமூக வலைத்தள தகவல்களைக் கொண்டே நாட்டின் நிலைமையை கணிப்பிட முயன்றதாகவும் அவர் தெரிவிக்கின்றமையும், செல்வதற்கு வேறு இடமில்லையெனின் கோட்டாபய மீண்டும் மூன்று மாதங்களுக்குள் நாடு திரும்பவும் கூடும் என்ற சந்தேகம் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment