அமைதியான போராட்டங்களில் ஈடுபடுவோரைப் பாதுகாப்பதற்கு ஏதுவாக பிரத்யேக அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக தெரிவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கத் தவறப் போவதில்லையெனவும் எச்சரித்துள்ளார்.
தான் ஜனாதிபதியானதும், போராட்டத்தில் ஈடுபட்டோரை தண்டிக்க ஆரம்பித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இதேவேளை, கோட்டா கோ கம போராட்டத்தை ஆதரித்து பதாகை பிடித்திருந்த வெளிநாட்டு பிரஜையொருவரது கடவுச்சீட்டினை குடிவரவு - குடியகல்வு திணைக்களம் பறிமுதல் செய்து விசாரணைக்கு அழைத்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment