சவுதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து தூது கொண்டு சென்றுள்ளார் அமைச்சர் நசீர் அஹமது.
சவுதியுடனான இலங்கையின் நட்புறவை கட்டி வளர்ப்பதோடு இரு நாட்டு கூட்டுறவு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான ரணிலின் எழுத்து மூல வேண்டுகோளையே நசீர் அஹமது ஒப்படைத்துள்ளார்.
சவுதியின் பிரதி வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பதற்கான வாய்ப்பு நசீர் அஹமதுக்கு சவுதி அரசினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment