மே 9 வன்முறையில் தொடர்புபட்ட 'கிரிமினல்களை' ஒரே நாளில் பிணையில் விடுவித்தமை பார தூரமான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அதற்கு சில நீதிபதிகளும் சட்டமா அதிபர் அலுவலகமும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் நேற்றைய தினம் சனத் நிசந்த தெரிவித்திருந்த நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களம் அவரை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
சனத் நிசந்தவின் பேச்சு நீதிமன்ற அவமதிப்பு என ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சித்த சனத் நிசந்த மீது விசாரணை ஆரம்பித்துள்ளது.
ஏலவே ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் சிறையிலடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment