கொலைக்குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு புகலிடம் கொடுத்திருந்த குற்றத்தின் பின்னணியில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்த அத்துராலிய ரதன தேரரின் கட்சித் தலைவருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
ஜுன் 5ம் திகதி, குடாவெல பகுதியில் இடம்பெற்ற கொலையின் பின்னணியில் சந்தேக நபர் தேடப்பட்டு வந்த நிலையில், அபே ஜன பல கட்சித் தலைவரின் தயவில் ஒளிந்திருந்ததாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
குறித்த கட்சிக்கு தேசியப்பட்டியல் ஊடாக கிடைக்கப் பெற்ற ஆசனத்தையே அத்துராலியே ரதன தேரர் சுவீகரித்துக் கொண்டுள்ளமையும் ஞானசார புறக்கணிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment