அரசியலிலிருந்து தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் எதுவுமில்லையென்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
2015 தேர்தல் தோல்வியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த போதிலும், மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த அவர், அண்மையில் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டிருந்ததோடு அவரால் ஜனாதிபதியான சகோதரன் கோட்டாபய நாட்டை விட்டு தப்பியோடியிருந்தார்.
எனினும், ரணில் ஊடாக நாட்டின் நிலைமை ஸ்தீரமாகி வருகின்ற நிலையில் கோட்டாபய நாடு திரும்பவுள்ளதுடன் மஹிந்த தான் ஓய்வு பெறப் போவதில்லையென அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment