நிமல் சிறிபாலவுக்கு மீண்டும் அமைச்சு பதவி - sonakar.com

Post Top Ad

Tuesday, 2 August 2022

நிமல் சிறிபாலவுக்கு மீண்டும் அமைச்சு பதவி

 



ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி  வழங்கப்பட்டுள்ளது.


தன் மீதான விசாரணைகளை முன்னெடுக்க இராஜினாமா செய்வதாக முன்னர் தெரிவித்திருந்த நிமலுக்கு, தற்சமயம் துறைமுகம் மற்றும் கடற்போக்குவரத்துக்கான அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.


ஜப்பான் நிறுவனம் ஒன்றிடமிருந்து லஞ்சம் பெற முயன்றதாக நிமல் சிறிபால மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment