சுங்க அதிகாரிகள் போல் நடித்து இலங்கையர் ஒருவரிடம் தங்க ஆபரணங்களை கொள்ளையிட முயன்ற இரு இலங்கைப் பிரஜைகளை கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது தமிழ்நாடு பொலிஸ்.
சென்னை நோக்கிப் பயணித்த இலங்கைப் பெண் ஒருவரை விமான நிலையத்திற்கு வெளியில் வைத்து, தம்மை சுங்க அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக தங்க ஆபரணங்கள் கொண்டு வந்ததாகக் கூறி குறித்த பெண்ணை இரு நபர்கள் மிரட்டி கொள்ளையிட முயன்றுள்ளனர்.
சந்தேகங்கொண்ட பெண் விமான நிலைய காவல் அதிகாரிகளிடம் முறையிட்டதைத் தொடர்ந்து இக்கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment