நல்லாட்சி அரசு காலத்தில், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கும் அமைச்சரவையில் இருக்க முடியாது என தெரிவித்து, சுதந்திரக் கட்சியையும் கை விட்டுச் சென்றவர்கள் இப்போது அதே ரணிலிடம் அமைச்சுப் பதவிகளுக்காக பேரம் பேசுவதாக தெரிவிக்கிறார் தயாசிறி ஜயசேகர.
அக்காலப்பகுதியில் மைத்ரிபால சிறிசேனவையும் ரணில் விக்கிரமசிங்கவையும் அசிங்கப்படுத்திய பலர் இன்று ரணிலை ஜனாதிபதியாக ஏற்றுக் கொண்டு அவரிடம் பதவிகளுக்காக காத்திருப்பதாக தயாசிறி மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment