இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கனின் தற்போதைய மொத்த கடன் தொகை 401 பில்லியன் ரூபா என தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா.
இந்நிலையில், ஸ்ரீலங்கன் உணவுத் தயாரிப்பு பிரிவின் 49வீத பங்கினை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பதற்கு அரசு முயற்சியெடுத்து வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச காலத்தில், எமிரேட்சுடனான உறவை முறித்துக் கொண்டதிலிருந்து தொடர் நஷ்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் விமான சேவையில் முதலிட வெளிநாட்டு நிறுவனங்கள் தயங்கி வருகின்றமையும், ஸ்ரீலங்கனின் சேவைத் தரம் வெகுவாக குறைந்துள்ளதுடன் செலவீனங்களை குறைக்க முடியாமல் தவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment