மக்கள் போராட்டத்தினால் நாட்டை விட்டு துரத்தப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு பதிலாக புதிய ஜனாதிபதியொருவர் ஏழு தினங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில் அதற்கான போட்டி ஆரம்பமாகியுள்ளது.
நாடாளுமன்றில் ஆகக்குறைந்தது 60 - 70 ஆசனங்களைத் தொடர்ந்தும் தக்க வைத்துள்ளதாக நம்பப்படும் பெரமுன, ரணில் விக்கிரமசிங்கவையே ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை சமகி ஜன பல வேகய சார்பில் சஜித்தும், ஜே.வி.பியின் அநுர குமார திசாநாயக்கவும் போட்டியில் உள்ளனர்.
இச்சூழ்நிலையில், தீர்வொன்றைக் காண்பது கடினமாக இருந்தால் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை முற்படுத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அதுவரை பொறுமை காப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கிறார். எவ்வாறாயினும், தற்சமயம் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவே அரசியல் யாப்பின் அடிப்படையில் அதிகாரத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment