பதில் ஜனாதிபதியாக கடமையாற்றும் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 20ம் திகதி இடம்பெறவுள்ள தேர்வில் ஜனாதிபதியாகத் தொடர்வதற்கான ஆதரவைப் பெற்றால், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ருவன் விஜேவர்தன நாடாளுமன்ற உறுப்பினராவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் எதிர்காலத் தலைவராகக் கருதப்படும் ருவன், தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரான ரணில் ஜனாதிபதியானால், ருவன் தேசியப் பட்டியல் உறுப்பினராவார் என கட்சி மட்டத்தில் விளக்கமளிக்கப்படுகிறது.
பெரமுன தரப்பினர் முட்டி மோதிக் கொண்டுள்ள நிலையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment