மஹிந்த ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் நாளை வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள் என நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர் அவரது சட்டத்தரணிகள்.
மஹிந்த, பசில், கபரால் உட்பட பெரமுனவின் முக்கிய நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகியே இவ்வாறு உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் குறித்த வழக்கு விசாரிக்கப்படவுள்ள நிலையில் அதுவரை இவர்கள் நாட்டை விட்டு தப்பியோட மாட்டார்கள் என உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள அதேவேளை, கோட்டாபய ராஜபக்ச தனது மனைவியுடன் சிங்கப்பூரில் தஞ்சமடைய முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment