புதிய சர்வகட்சி அரசொன்றை அமைப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக இரு தரப்பு கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய சூழ்நிலையில், சர்வ கட்சி அரசொன்றே அவசியம் என மைத்ரிபால தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இப்பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க பிரதமரான போதிலும், பெரமுன அதிகாரத்தில் இருக்கும் நிலையில் அரசை வெளிநாடுகள் முழுமையாக நம்பத் தயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment