கோட்டாபய ராஜபக்சவின் பெயரைக் கெடுத்து அவரது திட்டங்களை செயற்படுத்த விடாது தடுத்தது ராஜபக்ச குடும்பமே என்கிறார் இனவாதத்தை தூண்டி விட்டு ராஜபக்ச குடும்பத்தினர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குப் பெருந்துணையாகப் பணியாற்றிய தெரண ஊடக உரிமையாளர் திலித் ஜயவீர.
குடும்பத்தினர் கோட்டாபயவின் நற்பெயரைக் கெடுக்கும் வகையிலேயே செயற்பட்டு வந்ததாகவும் நாமல் மற்றும் பசில் ராஜபக்ச அரசு முடங்குவதற்கு அடிப்படைக் காரணம் எனவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, கோட்டாபய நல்ல மனிதர் என தாம் தொடர்ந்தும் மதிப்பளித்து வருவதாகவும் திலித் தெரிவிக்கின்றமையும், தமக்கெதிராக சமூக மட்டத்தில் உருவாகியுள்ள விமர்சனங்கள் நியாயமற்றவை என தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment