ஜப்பானிய நிறுவனம் ஒன்றிடம் நிமில் சிறிபால டிசில்வா 'லஞ்சம்' கேட்டுள்ளதாக நேற்றயை தினம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன் வைத்த குற்றச்சாட்டின் பின்னணியில், தாம் தற்காலிகமாக இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கிறார் நிமல் சிறிபால டிசில்வா.
குறித்த விடயம் தொடர்பில் நீதியான விசாரணையை மேற்கொள்ள இடமளிக்கும் வகையிலேயே தாம் இவ்வாறு தற்காலிகமாக பொறுப்பிலிருந்து ஒதுங்குவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
சஜித் பிரேமதாச, நிமலின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் அவரது பொறுப்பிலிருந்த அமைச்சில் இவ்விவகாரம் இடம்பெற்றதாக சூசகமாக குறிப்பிட்டிருந்த நிலையில் இந்த பதவி விலகல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment