ஜனாதிபதி மாளிகை மக்கள் போராளிகளினால் கைப்பற்றப்பட்டதையடுத்து, அதனைப் பார்வையிடுவதற்கு வரும் மக்கள் தொகை தினசரி அதிகரித்து வருகிறது.
இப்பின்னணியில், கோட்டை பகுதியில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் காட்சிகளைக் காணக்கூடியதாக உள்ளதோடு அன்றாட எரிவாயு மற்றும் எரிபொருள் பிரச்சினைகள் தற்சமயம் மறந்து போயுள்ள நிலை அவதானிக்கப்படுகிறது.
இதேவேளை, அலரி மாளிகையில் தங்கியிருந்த போராளிகள் குழு இரண்டாகப் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டதில் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment