கோட்டா கப்பலில்; மஹிந்த முகாமில் - sonakar.com

Post Top Ad

Monday, 11 July 2022

கோட்டா கப்பலில்; மஹிந்த முகாமில்

 



ஜுலை 9ம் திகதி மக்கள் போராட்டத்தின் விளைவறிந்து தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச, கடற்படைக் கப்பல் ஒன்றில் இலங்கைக் கடல் எல்லைக்குள் இருப்பதாக இராணுவ தகவலை ஆதாரங் காட்சி பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை, மஹிந்த ராஜபக்ச கடற்படை முகாம் ஒன்றில் பாதுகாப்பாக தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச, ஏலவே தனது அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டு விட்டதாக தெரிவித்தே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிருந்தார். எனினும், பசில் ராஜபக்ச தமது இரட்டைப் பிரஜாவுரிமையைக் கை விடாமலேயே அமைச்சுப் பொறுப்பை வகித்திருந்தார்.


ராஜபக்ச குடும்பம் ஒட்டு மொத்தமாக ஓடி ஒளியும் நிலை உருவாகியுள்ள சூழ்நிலையில், கோட்டாபய, தனது செய்திகளை சபாநாயகர் ஊடாக மாத்திரம் தெரிவிக்கப் போவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன் பதவி விலக கோட்டா அவகாசம் கோரியுள்ளமை தொடர்ந்தும் பலத்த சந்தேகத்துடன் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment