இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக தொடர்கிறார் ரணில் விக்கிரமசிங்க. இன்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெற்ற இரகசிய வாக்களிப்பில் 130க்கு அதிகமான வாக்குகளைப் பெற்று, ரணில் விக்கிரமசிங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோட்டாபய பதவி விலகியதையடுத்து பிரதமர் என்ற அடிப்படையில் பதில் ஜனாதிபதியாக கடமையாற்றிய ரணில், தற்போது நாடாளுமன்ற ஆதரவைப் பெற்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தொடரவுள்ளார்.
இன்றைய தினம் 223 பேர் வாக்களித்திருந்த நிலையில், அதில் 134 வாக்குகளை ரணில் பெற்றுள்ளமையும் டலசுக்கு 82 வாக்குகளும் அநுர குமாரவுக்கு 3 வாக்குகளும் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment