அநுரவும் ஆட்சிப் பொறுப்பேற்கத் தயார் - sonakar.com

Post Top Ad

Monday 11 July 2022

அநுரவும் ஆட்சிப் பொறுப்பேற்கத் தயார்

 



நாட்டின் நிர்வாகத்தை நிலைப்படுத்தும் அடிப்படையில் தற்காலிகமாக ஆட்சிப் பொறுப்பை ஏற்கத் தயார் என்கிறார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.


மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களைக் கொண்டு வரக் கூடிய நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் நீண்ட கால திட்டங்கள் சாத்தியமில்லையென தெரிவிக்கும் அவர், அதற்கேற்க குறுகிய கால செயற்திட்டத்துக்கமைவாக ஆட்சிப் பொறுப்பேற்று மீண்டும் மக்கள் விரும்பும் வகையிலான நாடாளுமன்றம் உருவாக வழி சமைக்கத் தயார் என்று அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.


20ம் திகதி நாடாளுமன்றம் ஊடாக புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்து, அடுத்த மார்ச் மாதத்துக்குள் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கு ஏது செய்ய வேண்டும் என ஏலவே கட்சித் தலைவர்கள் மத்தியில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment