கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி பாரிய அளவில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியின் விளைவாக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கொழும்பில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், போராளிகள் தற்போது ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்துள்ளதுடன் கோட்டா வெளியேறு என கோஷமிட்டு வருகின்றனர்.
எனினும், தனது பதவிக்காலம் முடிய முன்னர் விலகப் போவதில்லையென கோட்டாபய முன்னர் தெரிவித்திருந்தமையும் பதவிகளை மாற்றிக் காலம் கடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment