மேல் மாகாணத்தில் ஊரடங்கு; நாட்டில் அவசரகால சட்டம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 13 July 2022

மேல் மாகாணத்தில் ஊரடங்கு; நாட்டில் அவசரகால சட்டம்

 



பிரதமரை பதவி விலக்காது கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ள நிலையில், பதில் ஜனாதிபதியாகியுள்ள ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நாட்டில் அவசர கால சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளார்.


மேல் மாகாணத்தில் ஊரடங்கையும் அமுல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள அவர், கலகக்காரர்களை கைது செய்யவும், அவர்கள் பயணிக்கும் வாகனங்களைக் கைப்பற்றவும் ஆணையிட்டுள்ளார்.


சர்வகட்சி அரசொன்று அமைந்ததும் தாம் பிரதமர் பதவியைத் துறக்கத் தயாராக இருப்பதாக ரணில் அறிவித்திருந்த போதிலும் தற்போது அவர் ஜனாதிபதியாகியுள்ளமையும், எப்போதும் தாம் அரசியலமைப்பின் பிரகாரமே நடந்து கொள்ளப் போவதாக ரணில் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment