கடந்த வாரம் நாடாளுமன்றம் அருகே போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையில் இடம்பெற்ற முறுகலின் போது 50 கண்ணீர்ப் புகை குண்டுகளைத் திருடிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
போராட்டத்தின் உச்ச கட்டத்தில் மக்கள் சக்தியின் கை மேலோங்கியிருந்த நிலையில் பவ்வேறு சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததுடன் பாதுகாப்பு படையினரும் மென்மைப் போக்கைக் கடைப்பிடித்திருந்தனர்.
எனினும், தொடர்ந்தும் ஆங்காங்கு அதிகார துஷ்பிரயோக சம்பவங்களும் பதிவாகியிருந்ததுடன் இராணுவத்தினரின் ஆயுதம் பறிக்கப்பட்ட நிகழ்வும் இடம்பெற்றிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment