பாதுகாப்பான இடமொன்றை அடையும் வரை கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமா உத்தியோகபூர்வ ரீதியாக அறிவிக்கப்பட மாட்டாது என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலைதீவில் தங்கியுள்ள கோட்டாவுக்கு அங்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், வேறு ஒரு நாட்டுக்கு அவர் குடும்ப சகிதம் செல்லக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏலவே இந்தியா மறுத்துள்ளதுடன் அமெரிக்கா விசா விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பான இடமொன்றை அடையும் வரை ஜனாதிபதி என்கிற பதவியை கோட்டாபய துறக்கப் போவதில்லையென உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment