இலங்கையில், அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கும் தொடர்வதற்குமான மக்கள் உரிமை மறுக்கப்பட மாட்டாது என வெளிநாட்டு தூதர்களிடம் வாக்குறுதியளித்துள்ளார் ரணில் விக்கிரமசிஙக.
எனினும், அரசாங்க நிர்வாகத்துக்கான பிரத்யேக கட்டிடங்களைக் கைப்பற்றி, அவற்றின் செயற்பாட்டை முடக்குவதற்கு எந்தவிதமான உரிமையும் இல்லையெனவும், அவற்றை மீட்பதற்கான நடவடிக்கை மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதாகவும் ரணில் மேலும் விளக்கமளித்துள்ளார்.
ஆயுத படையினர் புகுந்து, ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதோடு தாக்குதலும் மேற்கொண்டதாக போராளிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment