கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக்குவதற்கு போராடியது போன்றே ரணில் விக்கிரமசிங்க பதவி லிலகும் வரை தமது போராட்டத்தைத் தொடரப் போவதாக தெரிவிக்கின்றனர் காலிமுகத்திடல் போராளிகளுள் ஒரு பகுதியினர்.
நாட்டின் அரசியலமைப்பு பிரகாரம், நாடாளுமன்றம் ஊடாக முறையான வாக்களிப்பினூடாக பெருவாரி ஆதரவைப் பெற்று ஜனாதிபதியாகியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க. எனினும், ராஜபக்ச குடும்பத்தினரைக் காப்பாற்றவே அவர் நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கும் போராளிகள் அவரும் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சஜித் பிரேமதாச பின் வாங்கிய அதேவேளை, அநுர குமாரவுக்கு அரவது கட்சி வாக்குகள் தவிர வேறு யாரும் வாக்களிக்காத சூழ்நிலையும், தேர்தல் காலம் வரை இடதுசாரி பேச்சுக்கள் எடுபடுகின்ற போதிலும், அண்மைக் கால தேர்தல்களில் ஜே.வி.பி எவ்வித முன்னேற்றத்தையும் காணவில்லையென்பதும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.
No comments:
Post a Comment