ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியுள்ள நிலையில், நேற்று முன் தினம் வரை அவரை எதிர்த்து கூட்டணி அமைத்தும், கருத்துக் கூறியும் வந்த அரசியல் பிரமுகர்கள் இன்று அவரை சந்தித்து, வாழ்த்துக் கூறி நட்பு பாராட்டிக் கொண்டுள்ளன.
முக்கியமாக, ரவுப் ஹக்கீமும் - ரிசாத் பதியுதீனும் இன்றைய நிகழ்வுக்குத் தவறாமல் சமூகமளித்துக் கொண்டதுடன் ரணிலுடனான தமது உறவைப் புதுப்பிக்க அவரது தலைமைத்துவத்தை ஏற்பதற்கான தயார் நிலையை வெளிக்காட்டியுள்ளனர்.
தம்மோடு சேர்ந்து போட்டியிட்டு விட்டு, அடுத்த பக்கம் பாய்வதில் வல்லவர் என ஹக்கீம் பற்றி அடிக்கடி கூறி வந்துள்ள ரணில், இன்றைய சந்தடிக்கு மத்தியிலும் ஹக்கீமைக் காட்டி இவர் பிரதமர் பதவியைக் கேட்கிறார் என்று கிண்டலிடித்திருந்தமையும், மனே கணேசன், மைத்ரிபால சிறிசேன போன்ற பிரமுகர்களும் புன்னகையுடன் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment