கட்சித் தலைவர்கள் சந்திப்பில் மேற்கொள்ளப்படும் தீர்மானம் எதுவாயினும் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக அறிவித்து விட்டு தலைமறைவாகியுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு முடிவுகளை எழுத்து மூலம் அறிவித்துள்ளார் சபாநாயகர்.
குறித்த சந்திப்பின் முடிவின் அடிப்படையில், ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும், ஏழு தினங்களுக்குள் பதில் ஜனாதிபதியொருவர் நியமிக்கப்பட வேண்டும், நாடாளுமன்ற பெரும்பான்மையுள்ள பிரதமா ஒருவரின் கீழ் சர்வ கட்சி அரசொன்று நியமிக்கப்பட வேண்டும், விரைவில் தேர்தலை நடாத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனை சபாநாயகர் எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment