புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கை கோர்த்து இயங்கவுள்ளதாக தெரிவிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் சந்திப்பின் பின்னர் ஆரோக்கியமான கலந்துரையாடலில் ஈடுபட்டு, கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டதாக தெரிவுக்கும் அவர், நாடாளுமன்றை பலப்படுத்தும் வகையிலான திட்டங்களை முன்னெடுக்க வலியுறுத்தியதாகவும் விளக்கமளித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி, நாடாளுமன்றைப் பலப்படுத்தும் அடிப்படையில் 19ம் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவதில் ரணில் மும்முரமாக இயங்கியிருந்ததோடு தொடர்ந்தும் நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறையில் நம்பிக்கை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment