கோட்டாபய ராஜபக்சவுக்கு மாலைதீவில் தஞ்சமளிக்கக் கூடாது என வலியுறுத்தி அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன.
சமூக வலைத்தளங்களிலும் மாலைதீவு அரசியல் செயற்பாட்டாளர்கள் இலங்கை மக்களுடனான தமது நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தி வரும் நிலையில், இன்று அதிகாலை விமானப்படை விமானத்தில் அங்கு சென்று தரையிறங்கியுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு நாட்டில் புகலிடம் வழங்கக் கூடாது என வலியுறுத்தி மாலைதீவு ஜனாதிபதி மாளிகையருகே போராட்டம் இடம்பெற்றுள்ளது.
அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்ட மாலைதீவின் அரசியல் தலைவர்களுக்கு தொடர்ச்சியாக பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் வாழ்க்கை வசதிகளை வழங்கி வந்த வரலாறு இலங்கைக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment