ஜனாதிபதி பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முயன்று, இயலாத நிலையில் நாட்டை விட்டுத் தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச, மீண்டும் நாடு திரும்புவார் என தெரிவிக்கிறார் ஜி.எல். பீரிஸ்.
ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் பெற்று, அவருக்கு இலங்கையிலேயே வாழ முடியும் என ஜி.எல் விளக்கமளித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க பிரஜாவுரிமையையும் இழந்த கோட்டாபயவுக்கு அண்மையில் அமெரிக்கா விசா வழங்க மறுத்திருந்த நிலையில், தற்சமயம் சிங்கப்பூரில் உள்ள அவர் நாடு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பை ஜி.எல் உருவாக்கியுள்ளமையும், மக்கள் புரட்சியால், நாட்டிலிருந்து கொண்டு பதவி விலகினால் தாம் கைது செய்யப்படக் கூடும் என்ற அச்சத்திலேயே கோட்டாபய தப்பியோடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment