ஆறு மாதங்களுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை சீராக்க முடியும் என்று ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க சொல்வது போல் அவரால் செய்ய முடியும் என்றால் தான் பிரதமர் பதவியிலிருந்து விலகத் தயார் என தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
ஓரு நாட்டின் பொருளாதாரத்தை ஆறு மாதங்களுக்குள் சீராக்குவது நடைமுறை சாத்தியமில்லையெனவும் அவ்வாறு ஒரு திட்டம் அவரிடமிருந்தால் அதனை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க விருப்பமில்லாவிட்டால், அதனை நாடாளுமன்றிலாவது சமர்ப்பிக்க முடியும் எனவும் ரணில் சவால் விடுத்துள்ளார்.
அவ்வாறு ஒன்றை செய்து காட்ட முடியும் என்றால் அது நோபல் பரிசை வெல்வதற்கான தகுதியைத் தரும் எனவும் தெரிவிக்கின்ற ரணில், தான் இராஜினாமா செய்வதற்கு தயார் என்பதை ஜனாதிபதிக்கு அறிவிப்பதாகவும் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment