எந்தவொரு பிரச்சினைக்கும் 'தீர்வு' இல்லாத நிலையில் இருக்கும் நடைமுறை அரசு பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
சர்வகட்சி அரசொன்றை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தை தாம் எப்போதோ முன் வைத்த போதிலும் அதனை அரசு ஏற்றுக் கொள்ளவில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சினாலும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காணும் 'யோக்யதை' இல்லையென்பது நிரூபணமாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் வைத்தே இன்று இவ்வாறு தெரிவித்துள்ள அவர், உடனடியாக அரசு பதவி விலகி, சர்வ கட்சி அரசொன்று நிறுவப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment