மாலைதீவில் எதிர்ப்புகளையடுத்து சிங்கப்பூர் பயணித்த கோட்டாபய ராஜபக்ச, அந்நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து விளக்கமளித்துள்ள சிங்கப்பூர் அரசு, கோட்டாபய 'தனிப்பட்ட' விஜயம் நிமித்தம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. எனினும், அங்கு அவர் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இலங்கையின் ஜனாதிபதியாவதற்காக தனது அமெரிக்க பிரஜாவுரிமையை இழந்த கோட்டாவுக்கு அண்மையில் அங்கு செல்ல விசா மறுக்கப்பட்டிருந்தது. ஆயினும், அவரது புதல்வர் அங்கு வாழ்கின்ற நிலையில், எதிர்காலத்தில் விசாவைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில், தற்சமயம் கோட்டா சிங்கப்பூருக்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment