ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பியோடியுள்ள நிலையில், அரசியல் யாப்பின் அடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ விளக்கமளித்துள்ளார் சபாநாயகர்.
கோட்டாபயவின் இராஜினாமா குறித்து விளக்கமளிக்கப்படவில்லையாயினும், கோட்டாபய ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவரால் இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெளிவு படுத்தியுள்ளார்.
இத்துடன், நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் ரணிலுக்கு இல்லையென எதிர்க்கட்சி தலைவர் உட்பட செயற்பட்டாளர்கள் தெரிவித்து வந்த கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment