மக்கள் போராட்டத்தினால் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த நிலையில், அதையும் நாட்டை விட்டு தப்பியோடிய பின்னரே கடிதம் மூலம் அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த கோட்டாபயவின் இராஜினாமா இன்று உத்தியோகபூர்வ ரீதியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 30 வருட காலத்தை நிறைவு செய்து நாட்டிற்கு சமாதானத்தைக் கொண்டு வந்த வரலாற்றுக் கதா பாத்திரம் ஒன்று சந்தர்ப்பவாத அரசியலுக்குப் பழியாகி விட்டதாக கடும் கவலை வெளியிட்டுள்ளது பொதுஜன பெரமுன.
மஹிந்தவை மீளவும் அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்காக அரசியல் சண்டியர்களின் கூட்டில் உருவாக்கப்பட்டிருந்த குறித்த கட்சியே தொடர்ந்தும் நாடாளுமன்றில் அதிக ஆசனங்களைக் கொண்ட தனிக் கட்சியாக இருக்கும் அதேவேளை, முன்னாள் எதிரி ரணில் விக்கிரமசிங்கவை தற்போது ஆதரித்து வருகிறது. எனினும், பசில் மற்றும் மஹிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியதும் இக்கட்சியும் காணாமல் போகும் என எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment