ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இடைக்கால அமைச்சரவை நியமனம் இடம்பெற்று வரும் நிலையில் அலி சப்ரி மற்றும் நசீர் அஹமது ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர்.
வெளியுறவுத்துறை அலி சப்ரியிடம் வழங்கப்பட்டுள்ள அதேவேளை நசீர் அஹமது சுற்றாடற்துறை அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.
கோட்டாபய விட்டுச் சென்ற இடத்திலிருந்தே ரணில் தொடர்கின்றமையும் பெரமுனவின் ஆதரவிலேயே ரணில் ஜனாதிபதியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment