கோட்டாபய ராஜபக்சவின் வீழ்ச்சியோடு இந்நாட்டில் சிங்கள - பௌத்த மக்களுக்கான ஆட்சியும் முடிவுக்கு வந்து விட்டதாக தெரிவிக்கிறார் ஒமல்பே சோபித தேரர்.
இலங்கையில் சிங்கள - பௌத்த ஆட்சியை நிறுவி பௌத்த தர்மத்தைக் காப்பாற்றுவதற்கான இறுதி சந்தர்ப்பம் எனவும் சிங்கள மக்களைக் காப்பாற்றக் கூடிய இறுதித் தலைவர் எனவும் உணர்வூட்டப்பட்டு ஆட்சியதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்ட கோட்டாபய ராஜபக்க, நிர்வாகத் திறனற்ற நிலையில் மக்களால் தூக்கியெறியப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து இவ்வாறு விளக்கமளித்துள்ள ஒமல்பே தேரர், 69 லட்சம் மக்கள் வாக்களித்த ஜனாதிபதியை 70 லட்சம் மக்கள் வீதிக்கிறங்கி வெளியேற்றியுள்ளதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கோட்டாபய உடனடியாக பதவியைக் கை விட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment