நாட்டை விட்டுத் தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதையடுத்து உருவான வெற்றிடத்தை நிரப்ப அடுத்த ஜனாதிபதியை நாடாளுமன்றம் நாளை தெரிவு செய்யவுள்ளது.
இந்நிலையில், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அநுர குமார திசாநாயக்க ஆகியோர் போட்டியாளர்களாகியுள்ளனர்.
எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகயவின் தலைவர் சஜித் போட்டியிலிருந்து விலகிக் கொண்டுள்ள நிலையில் இம்மூவர் மத்தியில் தெரிவு இடம்பெறவுள்ளது. பெரமுனவில் கருத்து முரண்பாடு நிலவுவதுடன் ஒரு தொகுதியினர் எதிர்க்கட்சியுடன் இணைந்து டலஸை ஆதரிக்கவுள்ளதால் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி வாய்ப்பைக் குறைப்பதற்கு சஜித் தரப்பு இவ்வாறு காய் நகர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment