இராஜினாமா கடிதத்தினை ஏலவே ஒப்படைத்ததாகக் கூறப்படும் நிலையில், அதிகாரம் கை விட்டுப் போக முன்பதாக இராணுவ விமானத்தில் மாலைதீவு சென்றடைந்துள்ளார் கோட்டாபய ராஜபக்ச.
நேற்றைய தினம் பசில் ராஜபக்ச விமான நிலையத்தில் தடுக்கப்பட்டிருந்த நிலையில், கோட்டா பசிலுடன் மாலைதீவு சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாலை 3 மணியளவில் விமானம் மாலைதீவு சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள அதேவேளை, கோட்டாவின் அமெரிக்க விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக முன்னதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment