மக்களால் தேர்வு செய்யப்பட்ட ராஜபக்ச அரசை 'காடையர்கள்' பதவி கவிழ்த்துள்ளதை அனுமதிக்க முடியாது எனவும் இராணுவத்தை அனுப்பி இந்தியா உதவ வேண்டும் எனவும் சுப்பிரமணிய சுவாமி வெளியிட்டுள்ள கருத்தை நிராகரித்துள்ளது இந்திய தூதரகம்.
மஹிந்த ராஜபக்சவின் உற்ற தோழனும், தெற்காசிய பிராந்தியத்தில் இனவாதத்தை ஊன்றுவதில் முக்கிய பணியாற்றி வருபவருமான சுப்பிரமணிய சுவாமி, தமது தோழர் மஹிந்த ராஜபக்சவுக்கு அரசியல் ரீதியாக இந்திய உறவை வளர்த்துக் கொள்ள பெரிதும் கை கொடுத்திருந்தார்.
எனினும், சீன - இந்திய முறுகலில் சிக்கி இலங்கை பொருளாதாரம் சின்னா பின்னமாகியுள்ள சூழ்நிலையில், நிர்வாகத்திறனற்ற அரசை மக்கள் வெளியேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment