ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாவதைத் தடுப்பதற்கான அரசியல் மட்ட போட்டி உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், சுதந்திரக் கட்சியும் டலஸ் அழகப்பெமவை ஆதரிக்கப் போவதாக தெரிவிக்கிறது.
சஜித் பிரேமதாச போட்டியிலிருந்து விலகி, டலசை முற்படுத்தியதன் விளைவாக பெரமுனவின் ஒரு தொகுதி வாக்கு தக்க வைக்கப்பட்டுள்ளதுடன், சுதந்திரக் கட்சி, விமல் - கம்மன்பில கூட்டணி மற்றும் பெரமுன கட்சியின் பரம எதிரிகளாக வர்ணிக்கப்பட்டு வந்த ஹக்கீம் - ரிசாதின் வாக்குகளும் கிடைக்கவுள்ளன.
சஜித் பிரதமராக்கப்படும் நிலையில், சர்வ கட்சி கூட்டணி அரசு உருவாகும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை, தனியொரு தேசியப் பட்டியல் உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்கவை பெரமுனவில் ஒரு சிலர் ஆதரித்தாலும் அவர் ஓரங்கப்பட்டுள்ள சூழ்நிலையில், நாளை படு தோல்வியை சந்திக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment